
கொரோனாவை கட்டுப்படுத்த WHO மற்றும் இலங்கை சுகாதார அமைச்சு மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளதன் பின்னணியில் மஸ்ஜித்களில் ஐங்கால தொழுகை உட்பட ஏனைய அனைத்து ஒன்று கூடல்களையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலக அளவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பல நாடுகள் பல்வேறு உள்நாட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இலங்கையில், பொது நிகழ்வுகள் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தொழுகைக்காக பள்ளிவாசல்களில் ஒன்று கூடுவதையும் தவிர்க்குமாறு ஜம்மியத்துல் உலமா கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment