நாடாளுமன்றத் தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 March 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை அரசாங்கம் விடுவித்திருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.


இத்தேர்தலுக்காக 700 கோடி ரூபா தேவைப்படுவதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளுக்காக அதிகாரிகளைத் தெரிவு செய்யும் பணி நிறைவு பெற்றிருப்பதுடன், அனுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல்கள்  தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலுக்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புக் கடமைகள் குறித்து அவருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் தற்சமயம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. விண்ணப்பங்களை 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

-ஐ. ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment