![](https://i.imgur.com/g4ftr3G.jpg?1)
நீர் கொழும்பு, அன்சார் ஹோட்டலில் நேற்றிரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் ஒருவர் காலையில் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை மேலும் அறுவர் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோட்டலுக்குள் மது அருந்த முனைந்த நபர்களைத் தடுக்க முற்பட்டதன் பின்னணியில் ஏற்பட்ட இவ்வன்முறையினால் கனேவன்பொல, கெக்கிராவயைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை ஹோட்டல் உரிமையாளர் உட்பட மேலும் சில ஊழியர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment