![](https://i.imgur.com/GdIDGxb.png?1)
இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள இரு நபர்களோடும் தொடர்பு வைத்திருந்ததாகக் கருதப்படும் 13 பேர் ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது நபரோடு தொடர்பு வைத்திருந்த 40 பேர் மற்றும் இரண்டாவது நபரோடு தொடர்பு வைத்திருந்த 25 பேரது விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்களே இவ்வாறு கண்காணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment