
இலங்கையில் இதுவரை 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 43 என தகவல் வெளியிடப்பட்டிருந்த அதேவேளை இன்றைய தினம் 9 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சரியான எண்ணிக்கை தற்போதைய அளவில் சரியான எண்ணிக்கை 50 எனவும் நேற்றைய தினத்தின் எண்ணிக்கை 41 எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டின் பின்னணியில் புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பகுதிகளில் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment