
இம்மாதம் முற்பகுதியில் இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலிருந்து இலங்கை வந்து, கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து வரும் 176 பேர் பற்றிய தகவல்களைத் திரட்டியுள்ளதாக தெரிவிக்கிறது பொலிஸ்.
குறித்த நபர்களில் கொரோனா பாதிப்புள்ளவர்கள் இருந்திருந்தால் பல இடங்களில் கொரோனா தொற்று இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களில் வெளிநாடுகளிலிருந்து வந்தோரே அதிகம் காணப்படுகின்றமையும் மார்ச் மாதம் இவ்வாறு குறித்த நாடுகளிலிருந்து வந்தவர்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment