
இலங்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியிலிருந்து இலங்கை வந்தோரே அதிகமாக இவ்வாறு கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் உள்நாட்டில் கண்டறியப்பட்ட நபரின் உறவினரான 17 வயது பெண்ணொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஏலவே வந்தவர்கள் கண்காணிப்பு மையங்களில் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையிலேயே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment