இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதைத் தவிர்த்து திட்டமிட்டுத் தமிழையும் தமிழர்களையும் இவ்வரசு புறக்கணித்திருப்பதாக தெரிவித்துள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
இக்காரணத்தினாலேயே தமது தரப்பு நேற்றைய தினம் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டதாக நாடாளுமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டது.
தனிச் சிங்கள தேசம், சிங்கள தலைமையெனும் கோசத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றே அண்மைய ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment