சட்டவிரோத கருத்தடை சர்ச்சைக்குள்ளாகி சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள குருநாகல் மருத்துவர் ஷாபியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஒளிப்பதிவு சாதனத்தை மேலதிக பரிசோதனைக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் ஊடாக இதனை மேற்கொண்டு குறித்த ரொகோடரில் அழிக்கப்பட்டுள்ள காட்சிகளை மீட்டெடுத்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த இயந்திரத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் அழிக்கப்பட்டுள்ள காட்சிகளை மீளப் பெறும் நிமித்தமே நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கு விசாரணை மார்ச் 17ம் திகதி தொடரவுள்ளது.
No comments:
Post a Comment