DIG லத்தீபின் இடத்துக்கு லயனல் ஜயதிலக - sonakar.com

Post Top Ad

Thursday, 6 February 2020

DIG லத்தீபின் இடத்துக்கு லயனல் ஜயதிலக

5HDQJeG

41 வருட கால சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுள்ள டி.ஐ.ஜி லத்தீப் விசேட அதிரடிப்படையில் வகித்த பதவிக்கு டி.ஐ.ஜி லயனல் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

1979ம் ஆண்டு பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டராக இணைந்து கொண்ட லத்தீப், 1984ம் ஆண்டு விசேட அதிரடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவு, முக்கிய நபர்களின் பாதுகாப்பு உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்த அவர் அண்மைக்காலமாக போதைப் பொருள் மற்றும் பாதாள உலக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முன்னிலையில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment