விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியாக 2016ம் ஆண்டு முதல் கடமையாற்றிய டி.ஐ.ஜி லத்தீப் தனது 41 வருட பாதுகாப்பு துறை சேவையிலிருந்து இன்று ஓய்வு பெறுகிறார்.
1979ம் ஆண்டு பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டராக இணைந்து கொண்ட லத்தீப், 1984ம் ஆண்டு விசேட அதிரடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு, முக்கிய நபர்களின் பாதுகாப்பு உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்த அவர் அண்மைக்காலமாக போதைப் பொருள் மற்றும் பாதாள உலக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முன்னிலையில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment