நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவி வருவதால் மரக்கறி விலை இன்னும் உயரும் அபாயம் என்ளதாக எச்சரித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன்.
இன்று (3) ஹற்றனில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளும் பாரிய இடர்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினமும் வட்டவள பகுதியில் சுமார் 4.5 லட்சம் பெறுமதியான மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment