இலங்கை பௌத்த நாடில்லை சகலருக்குமான நாடு என அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் மங்கள சமரவீர தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் பொலிசார் பிரத்யேக விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரமுகர்களிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் அதேவேளை, இது குறித்து முறைப்பாடொன்று இருப்பதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
எனினும், தன்னை நேரடியாக விசாரிக்கும் படி மங்கள சமரவீர நேற்றைய தினம் மாத்தறை பொலிசாரைத் தொடர்பு கொண்ட போது அவ்வாறு முறைப்பாடுகள் எதுவுமில்லையென விளக்கமளிக்கப்பட்டதாக மங்கள தரப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில், நிகழ்வில் கலந்து கொண்டிருந்தோரை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment