கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 198 வது வருட கொடியேற்று விழாவின் நிறைவு தினம் கடற்கரை பள்ளிவாசலில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றது.
கொடியிறக்கும் தினமான (06) இன்று வியாழனன்று மாபெரும் கந்தூரி அன்னதானம் ,வழங்கிவைக்கப்பட்டதன் பின்னர் விஷேட துஆ பிராத்தனையுடன் கொடி இறக்கப்பட்டது .
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் கடந்த (25/01/2020) சனிக்கிழமை கொடியேற்றம் ஆரம்பமானது. மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப், உலமாக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன கடந்த 12 தினங்களாக இடம்பெற்று வந்தமை குறிப்பிட்டத்தக்கது
இதன் போது உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் ஏராளமான பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- M. N. M. Afras
No comments:
Post a Comment