ரொமேனியா, டிட்ரோ எனும் கிராமத்தில் பேக்கரி ஒன்றில் பணியாற்றிய இரு இலங்கையருக்கு ஊரார் சேர்ந்து எதிர்ப்பு வெளியிட்டதன் பின்னணியில் அவ்விருவரும் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேக்கரியில் தேவைப்படும் பணியாளர்கள் உள்ளூரில் இல்லாததனாலேயே வெளி நாட்டிலிருந்து இருவர் வேலைக்கமர்த்தப்பட்டதாக பேக்கரி உரிமையாளர் விளக்கமளித்த போதிலும் நேற்றைய தினம் (1) ஊர்ப்பிரதிநிதிகள் ஒன்று கூடி குறித்த நிறுவனத்தில் தகுந்த ஊதியம் வழங்கப்படாத காரணத்தினாலேயே ஊரிலிருந்து யாரும் அங்கு இணைய விரும்புவதில்லையென தெரிவித்ததோடு தமது ஊரில் விற்பனை செய்யப்படும் பேக்கரி தயாரிப்புகளை இவ்விரு இலங்கையரும் தொடக் கூடாது என தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.
உள்ளூர் தேவாலயம் ஊடாக ஏற்பட்ட இந்த அழுத்தத்தின் பின்னணியில் ஈற்றில் இரு இலங்கையர்களையும் பணி நீக்கம் செய்து ஊராரிடம் பேக்கரி உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment