சீருடையில், சொகுசு வாகனம் ஒன்றில் 8 கிலோவுக்கு அதிகமான கேரள கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மாங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
நீதிபதி ஒருவரின் வாகனம் எனக்கூறி சோதனைச் சாவடியைக் கடக்க முற்பட்ட நிலையில் ஏலவே கிடைக்கப் பெற்றிருந்த தகவல் அடிப்படையில் சோதனை நடாத்தப்பட்டு 8.65 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் சீருடையிலேயே கடத்தலில் ஈடுபட்ட நிலையில் கைதாகியுள்ள குறித்த நபர் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment