பூஜித - ஹேமசிறிக்குப் பிணை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 February 2020

பூஜித - ஹேமசிறிக்குப் பிணை!


கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபது பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.



ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் பின்னணியில் குறித்த இருவரையும் சந்தேகநபர்களாக அறிவித்திருந்த மைத்ரி அரசு இருவரையும் விளக்கமறியலில் வைத்திருந்தது.

அரச உயர் மட்டத்தின் அலட்சியமே தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனமைக்குக் காரணம் என சாட்சியங்கள் தெரிவித்துள்ள அதேவேளை தற்போது ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment