இலங்கையை ஆட்சி செய்த இரு தரப்பிலும் எந்தளவுக்கு ஊழல் வேரூன்றியிருந்தது என்பதை வெளிவரும் ஒவ்வொரு அறிக்கையும் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கிறார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
பிணைமுறிக் கணக்காய்வு? ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழல், ஊழியர் சேமலாப நிதி மோசடி போன்றன அண்மைய எடுத்துக்காட்டுகளாகும் என தெரிவிக்கின்ற சபாநாயகர், ஒட்டு மொத்த சிஸ்டத்தையும் சுத்திகரிப்புச் செய்தாலேயே நாடு முன்னேறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.தே.க அரசில் இடம்பெற்ற பிணை முறி மோசடி ஊழலை விட பல மடங்கு முன்னைய மஹிந்த ஆட்சியில் நடந்திருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் இது தொடர்பிலான கணக்காய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ள சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment