அரசாங்கம் தவறான வழியில் பயணித்தால் அதை மக்கள் 'சுட்டிக்காட்ட' வேண்டும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இடம்பெற்ற அரச நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், தனக்கு வாக்களிக்காதவர்கள் உட்பட நாட்டின் அனைத்து சமூகங்களுக்குமான ஜனாதிபதியாக சேவையாற்றுவதே தனது கடமையெனவும் தெரிவிக்கிறார்.
சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதன் ஊடாகவே நாட்டின் உண்மையான அபிவிருத்தியைக் காண முடியும் எனவும் தனதுரையில் அவர் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment