இலங்கையில் கண்டறியப்பட்ட முதலாவது கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருந்த சீனப் பெண் முழுமையாகக் குணமடைந்து விட்டதாக தெரிவிக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜசிங்க.
ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டிருந்த 47 வயது சீனப் பெண்ணே குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் தியத்தலாவயில் பிரத்யேக முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment