ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் சுதந்திர தின உரை நன்றாகத் தான் இருந்தது என தெரிவிததுள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, பேச்சோடு நின்று விடாமல் அதனை செயற்பாட்டில் காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
1948 முதல் நன்றாகப் பேசத் தெரிந்த தலைவர்களே இலங்கையில் இருந்து வருவதாகவும் பேச்சை செயற்பாட்டுக்குக் கொண்டு செல்லும் வீரியம் அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடினமான முடிவுகளை துரிதமாக மேற்கொள்வதன் ஊடாக செயற்பாட்டை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் தனது தகவலில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment