எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சஜித் பிரேமதாச தலைமையில் அமையப் பெற்றுள்ள சமகி ஜன பலவேகய கூட்டணியின் மத்திய குழுவில் 60 வீதமான நியமனம் ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே மேற்கொள்ளப்படும் என இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அதில் 45 வீதத்தினை ஐ.தே.க செயற்குழு முடிவு செய்வதோடு 15 வீதம் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்மொழிவில் இடம்பெறும் எனவும் அனைத்து நியமனங்களும் ரணிலின் ஒப்புதலுடனேயே இடம்பெறும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஏனைய கூட்டணி கட்சிகளுக்கு 40 வீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள போதிலும் கூட்டணியின் முழுமையான நிர்வாகப் பொறுப்பு சஜித் பிரேமதாசவிடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment