ஈரானுடன் எதுவித முன் நிபந்தனையுமற்ற 'தீவிர' பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அந்நாடு அறிவித்துள்ளது.
ஈரானிய இராணுவ தளபதியின் கொலை பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளதோடு பதிலடி கொடுப்பதாகக் கூறி நேற்றைய தினம் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தது.
எனினும், குறித்த ஏவுகணைகள் இலக்கை அடையவோ உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தவோ இல்லையென தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர், ஏவுகணைகளை அனுப்பிய பின் ஈரானின் கோபம் தனிந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment