ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சர்ச்சைக்குத் தீர்வு காணும் நிமித்தம் ஒன்று கூடிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எவ்வித முடிவும் இன்றிக் கலைந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின் சஜித் பிரேமதாச தொடர்பிலான நம்பிக்கையில் தழம்பல் ஏற்பட்டுள்ள அதேவேளை அண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவினால் உருவான சர்ச்சைகள் பாரிய பின்னடைவை உருவாக்கியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் கட்சித் தலைமை பற்றிய இழுபறியும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment