ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவ இழுபறிக்கு முடிவு காணப்படாத நிலை தொடர்வதால் தமது கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசிப்பதாக கூட்டணிக் கட்சிகள் சில அறிவித்துள்ளன.
முன்னதாக சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரது தலைமையின் கீழ் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்த கட்சிகளும் தற்போது தாம் தனித்துப் போட்டியிடுவது குறித்து கட்சி மட்டத்தில் ஆராய்வதாக தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்த போதிலும் கட்சித் தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்க ரணில் இணங்க மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment