இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு பாகிஸ்தானில் இந்துக்கள் முகங்கொடுப்பது போன்று எந்தப் பிரச்சினையும் இல்லையென தெரிவிக்கிறது இந்தியாவின் RSS.
மஹிந்த ராஜபக்ச குடும்பம் இந்தியாவுடனான உறவை வளர்த்துக் கொண்டுள்ள நிலையில் இலங்கை விவகாரங்களில் இந்திய இனவாத சக்திகளின் தலையீடு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், குறித்த அமைப்பின் செயலாளர் சுரேஷ் ஜோசி இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் இந்துக்கள் போன்று எதுவித பிரச்சினைகளும் இன்றி வாழ்வதாக தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் - இந்தியாவுக்குமிடையில் இராமர் பாலம் கட்ட வேண்டும் என உணர்ச்சியூட்டலையும் செய்து வரப்படும் நிலையில், இலங்கை - மத்திய மாகாணம், திவுரும்பொலயில் இந்திய அனுசரணையில் பாரிய 'சீதை' கோயில் ஒன்றை நிறுவுவதற்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமையும் இராமாயண காலத்தில் சீதையைக் கடத்தி வந்து குறித்த பகுதியிலேயே மறைத்து வைத்திருந்ததாகவும் விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment