ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தின் மாணவர் அமைப்பின் அமைப்பாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவனல்லையைச் சேர்ந்த நபர் ஒருவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார்.
திகன வன்முறையையடுத்தே தான் சஹ்ரானுடன் இணைந்ததாக தெரிவித்துள்ள குறித்த நபர், சஹ்ரான் ஆயுதங்களை விநியோகித்தமை மற்றும் விரிவுரைகளை நடாத்திய விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, தமது செயற்பாடுகள் குறித்து வெளியில் தகவல் சொன்னவர்களை சஹ்ரான் சுட்டுக் கொன்றதாகவும் புத்தளம் - வனாத்தவில்லு பகுதியில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் விடயத்தை வெளியில் சொன்ன நபரும் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குறித்த சம்பவத்தின் பின்னரே சஹ்ரானின் போக்கு தீவிரமானதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2015 ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவையே சஹ்ரான் ஆதரித்துச் செயற்பட்டதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment