சீனர்களுக்கான "On arrival" விசாவை நிறுத்தியது அரசு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 28 January 2020

சீனர்களுக்கான "On arrival" விசாவை நிறுத்தியது அரசு!


சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முன் கூட்டியே விசா இன்றி விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் பெறக்கூடிய விசா முறைமையை இரத்துச் செய்துள்ளது அரசு.



இந்நிலையில், இலங்கை வருவதற்கு சீன சுற்றுலாப் பயணிகள் முன் கூட்டியே விசா எடுக்க வேண்டும் எனவும், விண்ணப்பத்தின் போது அவர்களது பிராந்தியத்தின் அடிப்படையில் தீவிர பரிசீலினையின் பின்னரே விசா வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து இலங்கையின் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனா கை கொடுத்திருந்ததோடு பெருமளவு சுற்றுலாப் பயணிகளை இலங்கை செல்ல ஊக்குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment