ரஞ்சன் ராமநாயக்கவின் கைதைத் தொடர்ந்து அரசால் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைத்து தமது எதிர்ப்பைக் காட்டப் போவதாக தெரிவித்துள்ளனர் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
நடிகர் ரஞ்சனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட சில டிவிடிக்களில் வயது வந்தோருக்கான ஒளிப்படங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் அவ்வாறு இருந்தால் அதனை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகுமா எனவும் கைதின் போது ரஞ்சனின் வீட்டில் இருந்த அஷு மாரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
காரணம் எதுவும் குறிப்பிடப்படாத சோதனை நடவடிக்கையில் பல மணி நேர தேடலின் பின்னர் துப்பாக்கி அனுமதிப்பத்திர விவகாரத்தை பொலிசார் கண்டுபிடித்து அதனடிப்படையில் கைது செய்தமை அரசியல் பழிவாங்கல் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment