காலஞ்சென்ற ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வருண லியனகே.
சபை நடவடிக்கைகளுக்கான புதிய தவணை இன்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அவர் எதிர்க்கட்சியில் சென்று அமர்ந்துள்ளதுடன் கடந்த காலத்தில் நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாடுகள் தம்மை எதிரணியில் அமரச் செய்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ரஞ்சித் டி சொய்சா அங்கு காலமானதையடுத்து அந்த வெற்றிடத்துக்கு வருண லியனகே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment