இலங்கையில் அமுலில் இருக்கும் முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டத்தை நீக்குமாறு தனி நபர் பிரேரணையொன்றை சபையில் சமர்ப்பித்துள்ளார் உண்ணாரவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர்.
இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக சட்ட வடிவில் பின்பற்றப்பட்டு வரும் குறித்த தனியார் சட்டத்தில் அவ்வப் போது காலத்துக்கேற்ற மாற்றங்கள் கொண்டு வருவதில் தொடர் இழுபறி நிலவி வருவதுடன் கொள்கை ரீதியாக கடுமையாக பிளவு பட்டுள்ள முஸ்லிம் சமூகம் இப்பொது விடயத்திலும் ஒன்றுபட்டு செயற்பட முடியாமல் தவிக்கிறது.
2009ம் ஆண்டு மஹிந்த ஆட்சியில் குறித்த சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கென நியமிக்கப்பட்ட குழு 10 வருடங்களைக் கடந்தும் ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியாமல் போன நிலையில் இவ்விவகாரம் பேசு பொருளாக மாறியிருந்தது. இந்நிலையில், பேரினவாத கடும்போக்காளர்கள் நாட்டில் ஒரே சட்டமே இருக்க வேண்டும் எனவும் முஸ்லிம்களுக்குப் பிரத்யேக சட்டம் அவசியமில்லையெனவும் தெரிவித்து வருகின்றமையும் அதன் தொடர்ச்சியில் ரதன தேரர் இன்று இப்பிரேரணையை முன் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment