அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறித்து விசனம் வெளியிட்டுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
ஐக்கிய தேசியக் கட்சி அரசின் போது சஜித் பிரேமதாச இது குறித்து எதுவும் பேசாது மௌனித்திருந்ததாக தெரிவிக்கின்ற மஹிந்த, தற்போது ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் போன்ற MCC, SOFA ஒப்பந்தங்களை கிழித்தெறிய வேண்டும் என சொல்வதைக் கேட்க தனக்கு கவலையாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
எதிர்க்கட்சியாக இயங்கிய போது பெரமுன தரப்பினர் குறித்த ஒப்பந்தங்களை கடுமையாக எதிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment