அங்கொட, ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வந்த சீனப் பெண் கொரனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுபே மாநிலத்திலிருந்து இலங்கை வந்திருந்த நிலையில் சுகயீனமடைந்த குறித்த பெண் கொரனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் குறித்த வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment