ரஞ்சன் ராமநாயக்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடாத்தத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்சன் ராமநாயக்க துப்பாக்கி சுடும் பயிற்சி செய்ததன் பின்னணியில் உருவான சர்ச்சையின் பின்னணியில் ரணில் - ரஞ்சன் இடையேயான கலந்துரையாடலின் போது தான் மஹிந்தானந்தவை சுட வேண்டியிருப்பதாக ரஞ்சன் தெரிவித்திருந்தமையே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment