இலங்கை, சூபி தரீக்காக்களின் உயர் சபை ஏற்பாட்டில் தேசிய ஜக்கியம், சகோதரத்துவம் சமாதானத்திற்கான நபி பெருமானாா் (ஸல்) அவா்களின் வாழ்க்கை வழி முறைகள் என்ற தலைப்பிலான மாநாடொன்று நேற்றைய தினம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மலேசியா,இந்தியா, சிங்கப்பூர், லண்டன், கட்டாா், துபாய், பங்களதேஷ் போன்ற இடங்களிலிருந்து இஸ்லாமிய புத்திஜீவிகளும் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
எதிா்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசஇ பாராளுமன்ற உறுப்பிணா்கள் ஏ.எச்.எம் பௌசிஇ அலி சாகிா் மௌலானாஇ பைசா் முஸ்தபாஇ எஸ்.எம். மரிக்காா்இ ஜனாதிபதி சட்டத்தரணிஇ பாயிஸ் முஸ்தபாஇ அலி சப்ரிஇ கொழும்பு பிரதி முதல்வா் மொகமட் இக்பால்இ. முன்னாள் ஆளுனா் அசாத்சாலி உட்பட்ட உள்நாட்டு பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
மாநாட்டில் இன ஜக்கியம், சகோதரத்துவம், போன்ற விடயங்களை முன்நிறுத்தி நபிகளாரின் வாழ்வியலைப் பின்பற்றி வாழ்வது எப்படி? போன்ற உரைகள் நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-அஸ்ரப் ஏ சமத்
No comments:
Post a Comment