ஈஸ்டர் தாக்குதல்தாரியான சஹ்ரானின் சகோதரர் ரிழ்வானை வைத்தியசாலையில் சந்தித்தது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் விசாரணை நடாத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த காலத்தில் ரவுப் ஹக்கீம் விளக்கமளித்திருந்த போதிலும், புதிதாகக் கிடைக்கப் பெற்றிருக்கும் முறைப்பாட்டொன்றின் அடிப்படையில் இவ்விசாரணை நடாத்தப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விவகாரத்தை மிப்லால் எனும் நபர் தலைமையிலான குழுவினர் முன்னர் முறைப்பாடாகப் பதிவு செய்திருந்த அதேவேளை, குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள ரவுப் ஹக்கீம் பங்கேற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment