ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவி வரும் குழப்ப நிலையில் முக்கிய பிரமுகர்கள் சிலர் செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை பெரும் அதிருப்தியைத் தருவதாக தெரிவித்துள்ளார் ஹர்ஷ டி சில்வா.
கருத்து வேற்றுமைகளை மறந்து முன் செல்வதற்காக அயராது பாடு பட்ட போதிலும் ஒரு தரப்புக்கு ஆதரவாக குரல் எழுப்புபவர்களை நீக்குவது அதிருப்தியான செயற்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
ரோசி சேனாநாயக்க, சரத் பொன்சேகா, அஜித் பெரேரா மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் ஹர்ஷ இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment