ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இன்று இடம்பெற்ற சோதனை மற்றும் கைதின் பின்னர் பொலிசாரின் நடவடிக்கைகளில் தமக்கு உடன்பாடில்லையென தெரிவிக்கிறார் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர.
பொது மக்கள் பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய, ஊழல்வாதிகள் தெளிவான ஆதாரத்துடன் இருக்கையில் அரசும் ஜனாதிபதியும் செல்லும் நேரான பாதைக்கு எதிராக பொலிசார் தவறான பாதையில் செல்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேலிடத்து உத்தரவின் பேரிலேயே தாம் சோதனை நடாத்துவதாக ரஞ்சன் வீட்டில் வைத்து பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment