இலங்கையில் தங்கியிருக்கும் அனைத்து சீனர்களையும் கொரொனா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கிறது சுகாதார அமைச்சு.
சீனாவில் ஆட்கொல்லி வைரசான கொரொனா பாதிப்பில் இதுவரை 135க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இலங்கையிலும் சீனப் பெண்ணொருவர் கொரொனா பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் வைத்தியசாலை மட்டத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் தங்கியிருக்கும் அனைத்து சீனர்களையும் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment