மரக்கறி விலை பெருமளவு அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 January 2020

மரக்கறி விலை பெருமளவு அதிகரிப்பு


கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் மரக்கறி வகைகளின் விலைகள் 4 மடங்காக  அதிகரித்துள்ளது.


நாட்டில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்குழு உறுப்பினர் ஐ.ஜே. விஜேனந்த குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களிலிருந்தே மரக்கறி வகைகளின் விலைகள் இவ்வாறு சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் 380 ரூபாவாகக் காணப்படுகின்றது. அத்துடன், கறி மிளகாய், தக்காளி, போஞ்சி உள்ளிட்ட மரக்கறி வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இருப்பினும், எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மரக்கறி வகைகளின் விலைகள் மீண்டும் வீழ்ச்சியடையும் என்றும்,  தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்குழு உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment