ஆட்சியதிகாரத்தில் அமர்ந்ததும் தமது வழமையான வியாபார நடவடிக்கைகளை ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர்களைப் பதவியில் அமர்த்திய மக்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் ஜே.வி.பியின் விஜித ஹேரத்.
கொழும்பில், இராணுவ தலைமையகத்தை ஷங்ரிலா ஹோட்டல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததன் தொடர்ச்சியில் தற்போது சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு 3 ஏக்கர் நிலத்தினை அமைச்சரவைக்குள் தீர்மானித்து விற்பனை செய்வதாகவும் அதற்கு மக்கள் எந்த வகையில் உடன்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் ஹேரத் மேலும் தெரிவிக்கிறார்.
ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆணையைப் பயன்படுத்தி, பொதுச் சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், மக்கள் ஆணை இதற்குத்தானா வழங்கப்பட்டது என்பதை மக்களே தெளிவு படுத்த வேண்டும் எனவும் அவர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment