நேற்றிலிருந்து சுமார் 75 முதல் 200 வரையான மாணவர்கள் திடீர் சுகயீனத்துக்குள்ளானதையடுத்து ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்குள்ளான மாணவர்கள் கொட்டகல மற்றும் திக்ஓய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று கல்லூரி மூடப்பட்டுள்ளது.
முழுமையான பரிசோதனைகளை நடாத்தி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரே கல்லூரி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment