நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்த போதிலும் நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத கை-கட்டப்பட்ட நிலையில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவும் தானிருந்த அதே நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஜனாதிபதி பதவிக்காலத்தையும் சேர்த்து தான் முப்பது வருடங்கள் நாடாளுமன்றில் இருந்திருப்பதாகவும் தனது அனுபவத்தின் ஊடாக கோட்டாவின் தற்போதைய நிலையை ஊகிக்க முடிகிறது எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கோட்டாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவி அவசியம் தேவைப்படும் எனவும் மைத்ரி மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment