அரச நிதி மோசடி வழக்கிலிருந்து கெஹலிய விடுவிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 20 January 2020

அரச நிதி மோசடி வழக்கிலிருந்து கெஹலிய விடுவிப்பு


மஹிந்த அரசில் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் அமைச்சு நிதியைப் பயன்படுத்தி தனது தனிப்பட்ட தொலைபேசி கட்டணங்களைக் கட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.



லஞ்ச-ஊழல் ஆணையாளரின் அனுமதியின்றியே குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த டிசம்பர் மாதம் விசாரணைகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கெஹலிய மற்றும் அவரது முன்னாள் அரச அச்சக பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஆகியோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment