அவுஸ்திரேலியா, மெல்பர்ன் நகரில் சன நெரிசலான அங்காடிகள், ரயில் நிலையங்களில் அண்மைக்காலமாக பிக்-பொக்கற் திருட்டில் ஈடுபட்டு வந்த ஐந்து இலங்கையர் உட்பட்ட எழுவர் கொண்ட குழுவை அந்நாட்டின் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த குழுவில் இலங்கையைச் சேர்ந்த இரு பெண்களும் இந்தியாவைச் சேர்ந்த இரு பெண்களும் உள்ளடக்கம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
திட்டமிட்டு செயற்பட்டு வந்த இக்குழு கடந்த இரு மாதங்களாக பெருமளவு திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment