ஈஸ்டர் தாக்குதலை விசாரணை நடாத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகி ஏழு மணி நேர விசாரணைக்கு முகங்கொடுத்துள்ளார் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை கடந்த வருடமே நிறைவு பெற்ற போதிலும் அதற்கு மெலாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடந்து வருகிறது. அத்துடன் முன்னைய சாட்சிகள் பலரும் மீண்டும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே , பூஜிதவிடம் நீண்ட விசாரணை இடம்பெற்றுள்ளமையும் குறித்த சம்பவத்தின் பின்னணியிலேயே பூஜிதவுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment