பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சுகயீனமுற்று தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வீடு திரும்பியுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிபெற்றிருந்த நிலையில் ராஜிதவுக்கு நீதிமன்றம் பிணையும் வழங்கியிருந்தது.
எனினும், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த ராஜித நேற்று மாலை வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ராஜித, ரூமி உட்பட்டோரை எதிர்வரும் 17ம் திகதி ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment