அரபுலகில் நீண்ட காலமாக ஆட்சியதிகாரத்தில் இருந்த ஓமானின் சுல்தான் கபூஸ் காலமானதையடுத்து அவரது உறவினரான ஹைதம் பின் தாரிக் புதிய சுல்தானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளி மாலை உயிரழந்த சுல்தான் கபூசுக்கு 79 வயது என்பதோடு 1970ம் ஆண்டிலிருந்து ஆட்சியதிகாரத்தில் இருந்தவராவார். அவர் உயிரிழந்ததோடு அவரால் பிரேரிக்கப்பட்டதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சரான 65 வயது ஹைதம் புதிய சுல்தானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுல்தான் கபூசுக்கு (படத்தில் வலது) குழந்தைகளோ, சகோதரர்களோ இல்லாத நிலையில் ஆட்சியதிகாரத்துக்குத் தேவையான சட்ட மாற்றங்களையும் அவர் ஏலவே உருவாக்கி வைத்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment