சந்திரிக்காவின் அமைப்பாளர் பதவி பறிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 17 January 2020

சந்திரிக்காவின் அமைப்பாளர் பதவி பறிப்பு


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.


மாற்றீடாக சு.க நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பாரம்பரியம் அழிக்கப்படுவதாக நீண்ட நாட்களாக சந்திரிக்கா முறையிட்டு வந்த நிலையில் அவரது ஈடுபாடு குறைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment