கல்முனை: இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 January 2020

கல்முனை: இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு


இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் அன்னமலை -2 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வேப்பையடி இராணுவ முகாமில் குறித்த இராணுவ சிப்பாய் சடலம் செவ்வாய்க்கிழமை(7) அதிகாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. அனுராதபுர மாவட்ட  சிறிபுர பகுதியை சேர்ந்த யு.ஏ சுஜீத் பாலசூரிய (வயது-37) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நள்ளிரவு தனக்கு நெஞ்சு வலிப்பதாக சக இராணுவ வீரரிடம் கூறிய பின்னர் திடீரென மயக்கமடைந்து நிலத்தில்  விழுந்துள்ளார். பின்னர் இராணுவ வீரர்கள் உடனடியாக குறித்த வீரரை மீட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவ்வாறு  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் இறந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும் தற்போது சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment